Download Thirupalliyezhuchi Songs Tamil PDF
You can download the Thirupalliyezhuchi Songs Tamil PDF for free using the direct download link given at the bottom of this article.
File name | Thirupalliyezhuchi Songs Tamil PDF |
No. of Pages | 6 |
File size | 100 KB |
Date Added | Jan 7, 2023 |
Category | Religion |
Language | Tamil |
Source/Credits | Drive Files |
Overview of Thirupalliyezhuchi Songs
Thirupalliyezhuchi are songs sung to wake up the Lord and awaken the soul that is sleeping without spiritual awareness in us to feel the mercy of the Lord. ‘Suprabhatam’ is its Sanskrit equivalent.
Tirupalliyeyuchi sung on Aranganathan composed in Tamil by Thondaradippodi Alvar from Thiruvaranga is a pioneer of Thirupalliyezhuchi type of works.
This is a part of Thiruvachagam, one of the great Tamil devotional works composed by Saint Manikkavasagar. The Tamil people say that “One who is not moved by Thiruvachagam will not be moved by anything in this world.” This work is a Suprabatham for the God of Thiruperum thurai (The present day Avudayar Koil near Pudu kottai). Suprabatham are completely absent in ancient Sanskrit literature. This Thirupalliyezhuchi was followed by several in Tamil by great Vaishnavite saints and in the last century the first Sanskrit work, Venkatesa Suprabatham.
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1 அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9 புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10
![Thirupalliyezhuchi Songs Tamil PDF](https://pdfcity.in/wp-content/uploads/2023/01/Thirupalliyezhuchi-Songs-Tamil-PDF.png)